என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தேஜ் பிரதாப் யாதவ்
நீங்கள் தேடியது "தேஜ் பிரதாப் யாதவ்"
லாலு பிரசாத் கட்சியில் ‘சீட்’ வழங்குவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக தேஜ் பிரதாப் யாதவ், கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். #LaluPrasad #TejPratap
பாட்னா:
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன.
இந்த கூட்டணிக்கு சரியான போட்டியை ஏற்படுத்துகிற விதத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக்சமதா, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது), விகாஷீல் இன்சான் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியில் ‘சீட்’ வழங்குவதில் மோதல் வெடித்துள்ளது. லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஆதரவாளர்களுக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதேபோன்று கூட்டணி கட்சித்தலைவர்களுடனான பேச்சுவார்த்தையில் லாலு பிரசாத்தின் இளையமகன் தேஜஸ்வி பிரசாத் யாதவை ஈடுபடுத்தி விட்டு, தேஜ் பிரதாப் யாதவை ஓரங்கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதில் கடும் அதிருப்தி அடைந்த தேஜ் பிரதாப் யாதவ், கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நேற்று விலகினார். இதை ‘பேஸ்புக்’ பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார்.

விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் திடீரென மாயமாகியுள்ளார். #TejPratapYadav
பாட்னா:
பீகார் முன்னாள் முதல்- மந்திரி லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ்பிரதாப்.
இவருக்கும், பீகார் எம்.எல்.ஏ. சந்திரிகாவின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் ரூ.100 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த திருமணம் தற்போது விவாகரத்துக்கு வந்துள்ளது.
திருமணமான 6 மாதத்தில் விவாகரத்து கேட்டு தேஜ் பிரதாப் பாட்னா கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இது அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிறையில் உள்ள லாலுபிரசாத் யாதவ் தன்னை பார்க்க உடனடியாக வருமாறு தேஜ்பிரதாப்புக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து அவர் தந்தையை பார்க்க சென்றார்.
தந்தையை பார்த்து விட்டு ராஞ்சியில் இருந்து பாட்னா திரும்பும்போது தேஜ்பிரதாப் யாதவ் திடீரென மாயமானார். போதிகயாவில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தபோது அவர் மாயமானார். தேஜ்பிரதாப் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. #TejPratapYadav

சினிமாவில் இருந்து அரசியலில் குதிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.
பாட்னா:
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ்பிரதாப் யாதவ் என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் கட்சியுடன் கூட்டணி அமைத்து லாலு பிரசாத் யாதவ் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது, தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும், தேஜ்பிரதாப் யாதவ் சுகாதாரத்துறை மந்திரியாகவும் பதவியேற்றனர்.
பின்னர், ஆட்சியை கவிழ்த்து விட்டு நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தார். பின்னர், தேஜஸ்வி யாதவ் முழு அரசியலில் இறங்கினார். தந்தை சிறை வாசத்தில் இருக்கும் நிலையில், தேஜஸ்வி கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்து, சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களிலும் வென்று காட்டினார்.
ஆனால், தேஜ்பிரதாப் யாதவ் அரசியலில் கவனம் செலுத்தவில்லை. சமீபத்தில் திருமணம் முடித்த அவர் தனது பார்வையை கலைத்துறை பக்கம் தற்போது திருப்பியுள்ளார். ஏற்கனவே, ஒரு போஜ்பூரி படத்தில் அவர் நடித்து இருந்தாலும், தற்போது பாலிவுட்டில் கால்தடம் பதித்துள்ளார்.
‘ருத்ரா - தி அவதார்’ என்ற படப்பெயருடன் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ளார்.
×

X